லாஸ்பேட்டை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வைத்தியநாதன் 5,701 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
புதுச்சேரி மாநிலம் லாஸ்பேட்டை தொகுதியில் தே.ஜ. கூட்டணியில், பாஜக சார்பில் புதுச்சேரி மாநிலத் தலைவர் சாமிநாதனும், காங்கிரஸ் சார்பில் வைத்தியநாதனும் போட்டியிட்டனர். முதல் சுற்று முதலே காங்கிரஸ் வேட்பாளர் வைத்தியநாதன் முன்னிலையில் இருந்து வந்தார். நிறைவாக 14,592 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
சாமிநாதன் 8,891 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். 5,071 வாக்குகள் வித்தியாசத்தில் வைத்தியநாதன் தொகுதியைக் கைப்பற்றினார்.
இதேபோல் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சத்தியமூர்த்தி-825, நாம் தமிழர் வேட்பாளர் நிர்மல் சிங்-1,168, அமமுக வேட்பாளர் காமாட்சி-71 வாக்குகள் மட்டுமே பெற்றனர். நோட்டாவுக்கு 423 வாக்குகள் பதிவாகின.