தமிழகம்

திருநள்ளாறு தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் சிவா வெற்றி

வீ.தமிழன்பன்

திருநள்ளாறு சட்டப்பேரவைத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் பி.ஆர்.சிவா 1,380 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இத்தொகுதி என்.ஆர்.காங்கிரஸுக்கு ஒதுக்கப்படாத காரணத்தால் அதிருப்தியடைந்த, அக்கட்சியைச் சேர்ந்த பி.ஆர்.சிவா சுயேச்சையாகப் போட்டியிட்டார். இதையடுத்து அவர் என்.ஆர்.காங்கிரஸிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் அவர் 9,796 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

பாஜக சார்பில் போட்டியிட்ட தொழிலதிபர் ஜி.என்.எஸ்.ராஜசேகரன் 8,416 வாக்குகளும், முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மாநில துணைத் தலைவருமான ஆர்.கமலக்கண்ணன் 7,731 வாக்குகளும் பெற்றுத் தொல்வி அடைந்தனர்.

வாக்குகள் விவரம்:

பி.ஆர்.சிவா (சுயேச்சை): 9,796
ஜி.என்.எஸ்.ராஜசேகரன் (பாஜக): 8,416
ஆர்.கமலக்கண்ணன் (காங்கிரஸ்): 7,731
மு.சிக்கந்தர் பாஷா (நாம் தமிழர்): 347
கே.குரு சிந்தா (தேமுதிக): 127
தர்பாரண்யம் (அமமுக): 58
நோட்டா: 173

அமமுக வேட்பாளர் தர்பாரண்யம் வாக்குப் பதிவுக்கு முன்னதாகவே பாஜகவில் இணைந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT