தமிழகம்

காரைக்கால் தெற்கு தொகுதியில் திமுக வேட்பாளர் நாஜிம் வெற்றி

வீ.தமிழன்பன்

காரைக்கால் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியில், திமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் ஏ.எம்.எச். நாஜிம் 12,034 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அதிமுக வேட்பாளரும், தற்போதைய எம்எல்ஏவுமான கே.ஏ.யு.அசனா 5,367 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 20 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்ற நாஜிம், தற்போது அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

வாக்குகள் விவரம்:

ஏ.எம்.எச்.நாஜிம் (திமுக): 17,401

கே.ஏ.யு.அசனா (அதிமுக): 5,367

மரிய அந்துவான் (நாம் தமிழர்): 699

முகமது சித்திக் (அமமுக): 132

அ.நெப்போலியன் (இந்திய ஜனநாயகக் கட்சி): 67

ஆர்.ஜெகதீசன் (தேமுதிக): 39

நோட்டா: 221

SCROLL FOR NEXT