சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளில் தாராபுரம் தொகுதியில் ஆரம்பம் முதலே பாஜக வேட்பாளர் எல்.முருகன் முன்னிலை வகித்து வந்த நிலையில், 14-வது சுற்றில் 1,166 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.
தாராபுரம் (தனி) தொகுதியில் பாஜகவின் மாநிலத் தலைவர் எல்.முருகன் போட்டியிட்டார். இவரை எதிர்த்து திமுகவில் கயல்விழி செல்வராஜ், அமமுகவில் கலாராணி, நாம் தமிழர் கட்சியில் ரஞ்சிதா, மக்கள் நீதி மய்யத்தில் சார்லி ஆகியோர் உட்பட 14 பேர் போட்டியிட்டனர்.
இந்த நிலையில் இன்று நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கை முடிவுகளில் ஆரம்பம் முதலே பாஜகவின் மாநிலத் தலைவர் எல்.முருகன் முன்னிலை வகித்து வந்தார். இந்நிலையில் 14-வது சுற்றில் எல்.முருகன் திடீரெனப் பின்னடவைச் சந்தித்துள்ளார். 1,166 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.
திமுக கயல்விழி செல்வராஜ்- 48,998
பாஜக எல்.முருகன்- 47,832
அமமுக - 555
மநீம - 1123
நாம் தமிழர் கட்சி- 3209 ஆகிய வாக்குகளைப் பெற்றுள்ளனர்.