தமிழகம்

புதுச்சேரி தேர்தல்: உப்பளம் தொகுதி திமுக வேட்பாளர் அனிபால் கென்னடி வெற்றி 

அ.முன்னடியான்

புதுச்சேரியின் உப்பளம் தொகுதியில் திமுக வேட்பாளர் அனிபால் 4,726 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

உப்பளம் தொகுதியில் காங்கிரஸ்-திமுக கூட்டணியில் திமுக சார்பில் அனிபால் கென்னடியும், என்.ஆர் காங்கிரஸ் -பாஜக- அதிமுக கூட்டணி சார்பில் அதிமுக கிழக்கு மாநிலச் செயலாளர் அன்பழகனும் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் திமுகவைச் சேர்ந்த அனிபால் கென்னடி தொடக்கத்திலிருந்தே முன்னிலை பெற்று வந்தார். நிறைவாக 13,227 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அன்பழகன் 8,501 வாக்குகள் பெற்று தோல்வியை அடைந்தார். 4,726 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் அனிபால் கென்னடி தொகுதியைத் தக்கவைத்தார். 4 முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற அன்பழகன் இம்முறை தோல்வியைத் தழுவினார்.

மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சந்தோஷ் குமார் 621 வாக்குகள், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தேவிபிரியா 559 வாக்குகள் பெற்றனர். அமமுக 43 வாக்குகள் பெற்றது. நோட்டாவுக்கு 216 வாக்குகள் விழுந்தன.

SCROLL FOR NEXT