நெல்லை சட்டப்பேரவை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
17 சி படிவத்தில் உள்ள எண்ணுக்கும் கன்ட்ரோல் யூனிட்டில் உள்ள எண்ணுக்கும் வித்தியாசம் இருப்பதால் கடந்த ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய 5 சட்டப் பேரவை தொகுதிகளில் பதிவான வாக்குகள் காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன.
பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம் தொகுதிகளில் திமுக முன்னிலை வகிக்கிறது.
அம்பாசமுத்திரத்தில் அதிமுக முன்னிலை வகிக்கிறது. திருநெல்வேலி தொகுதியில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் முன்னிலை வகித்துவந்தார்.
இந்நிலையில், அங்கு வாக்கு எண்ணிக்கை கடந்த ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.