அவிநாசி தொகுதியில் சபாநாயகர் தனபால் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
அவிநாசி (தனி) தொகுதியில் இரண்டாவது முறையாகப் போட்டியிடும் சபாநாயகர் ப.தனபாலை எதிர்த்து, திமுகவில் கூட்டணிக் கட்சியான ஆதித் தமிழர் பேரவையின் இரா.அதியமான் போட்டியிட்டார். இந்த நிலையில் அதிமுகவுக்குச் சாதகமான தொகுதியாகப் பார்க்கப்படும் இந்தத் தொகுதியில், ஆரம்பம் முதலே அதிமுகவின் ப.தனபால் முன்னிலை வகித்து வருகிறார்.
அவிநாசி தொகுதியில் 6-ம் சுற்று நிலவரப்படி, ப.தனபால் 23,181 வாக்குகளும், இரா.அதியமான் 15,496 வாக்குகளும் பெற்றுள்ளனர். தேமுதிக சார்பில் போட்டியிட்ட மீரா 562 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் ஷோபா 2,106 வாக்குகளும் பெற்றுள்ளனர். மக்கள் நீதி மய்யத்தின் வெங்கடேஸ்வரன் 1,598 வாக்குகள் பெற்றுள்ளார். நோட்டாவுக்கு 482 வாக்குகள் கிடைத்துள்ளன.
6 சுற்றுகளின் முடிவில் 7,685 வாக்குகள் சபாநாயகர் தனபால் முன்னிலையில் உள்ளார்.