தமிழகம்

தொழில் நிறுவனங்களில் மழை பாதிப்புகளை பார்வையிட மத்திய அமைச்சர் கல்ராஜ் இன்று சென்னை வருகை: சங்க பிரதிநிதிகளையும் சந்திக்கிறார்

செய்திப்பிரிவு

சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தொழில் நிறு வனங்களை மத்திய குறு, சிறு, நடுத்தர தொழில்கள் துறை அமைச் சர் கல்ராஜ் மிஸ்ரா இன்று பார்வையிடுகிறார். சங்கப் பிரதிநிதி களையும் அவர் சந்திக்கிறார்.

தமிழகத்தில் சமீபத்தில் பெய்த தொடர் கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சி புரம், கடலூர் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தொழில் நிறுவனங்களில் வெள்ளம் சூழ்ந்து, கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டது. சென்னையில் கிண்டி, அம்பத்தூர், பெரும்புதூர் தொழிற்பேட்டைகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் அதிக நஷ்டத்தை சந்தித்துள்ளன.

இதைத்தொடர்ந்து, சென்னை யில் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட வந்த மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடுவை தமிழக சிறு, குறு தொழில் நிறுவன சங்க பிரதிநிதிகள் சந்தித்து, நிவாரணம் மற்றும் கடனுதவி தொடர்பான மனுக் களை அளித்தனர். டெல்லி சென்ற வெங்கய்ய நாயுடு, இதுதொடர்பாக பிரதமர் மோடியிடம் அறிக்கை ஒன்றை அளித்துள்ளார்.

சமீபத்தில் டெல்லி சென்ற தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் நிர்வாகிகளும் மழை பாதிப்புகள் குறித்து கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி, கல்ராஜ் மிஸ்ரா உள்ளிட்டோரிடம் தெரிவித்தனர்.

இந்நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தொழில் நிறுவனங்களைப் பார்வையிட மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா இன்று (19-ம் தேதி) சென்னை வருகிறார். கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள நிறுவனங்களைப் பார்வையிடுகிறார். குறு, சிறு, நடுத்தர தொழில்கள் மேம்பாட்டு நிறுவனத்தில் சங்க பிரதிநிதிகளை இன்று மதியம் 3.30-க்கு சந்திக்கிறார்.

அருண் ஜேட்லியும் வருகிறார்

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியும் விரைவில் சென்னைக்கு வந்து, தொழில் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளைப் பார்வையிட உள்ள sதாக கூறப்படுகிறது. சென்னைக்கு வரும் மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி, கல்ராஜ் மிஸ்ரா ஆகியோர் முதல்வர் ஜெயலலிதாவையும் சந்திக்க உள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரி விக்கின்றன

SCROLL FOR NEXT