தமிழகம்

புதுச்சேரி தேர்தல்: நெடுங்காடு தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் முன்னிலை

வீ.தமிழன்பன்

காரைக்கால் நெடுங்காடு (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில், முதல் சுற்று முடிவில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் சந்திர பிரியங்கா 4,180 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் 30 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்.6ஆம் தேதி நடைபெற்றது. மொத்தம் 81.70 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

தற்போதைய நிலவரப்படி என்.ஆர்.காங்கிரஸ் 12 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 4 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில், முதல் சுற்று முடிவில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் சந்திர பிரியங்கா 4,180 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் ஏ.மாரிமுத்து 2,606 வாக்குகள் பெற்றுள்ளார். சுயேச்சை வேட்பாளர் டாக்டர் விக்னேஸ்வரன் 2,127 வாக்குகள் பெற்றுள்ளார்.

SCROLL FOR NEXT