துரைமுருகன்: கோப்புப்படம் 
தமிழகம்

7 முறை வென்ற காட்பாடி தொகுதியில் துரைமுருகன் பின்னடைவு

செய்திப்பிரிவு

காட்பாடி தொகுதியில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த ஏப். 06 அன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (மே. 02) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.

காட்பாடி தொகுதியில் திமுக சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன், அதிமுக சார்பில் வி.ராமு, நாம் தமிழர் கட்சி சார்பாக ச.திருக்குமரன், அமமுக சார்பில் ஏ.எஸ்.ராஜா, மக்கள் நீதி மய்யம் சார்பில் கூட்டணியில் உள்ள இந்திய ஜனநாயகக் கட்சியின் எம்.சுதர்சன் ஆகியோர் போட்டியிட்டனர்.

தபால் வாக்கு முடிவுகளின் அடிப்படையில், அதிமுகவின் வி.ராமு 6,918 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார். துரைமுருகன் 5,609 வாக்குகள் பெற்று 1,309 வாக்குகள் வித்தியாசத்தில் துரைமுருகன் பின்னடைவில் உள்ளார்.

11 முறை சட்டப்பேரவைத் தேர்தலில் களம் கண்ட துரைமுருகன், 9 முறை காட்பாடி தொகுதியில் போட்டியிட்டு 7 முறை வென்றுள்ளார். இம்முறை 10-வது முறையாக இத்தொகுதியில் அவர் போட்டியிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT