சென்னை, கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார்.
தமிழகத்தில் கடந்த ஏப். 06 அன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (மே. 02) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.
இத்தேர்தலில், கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிட்டார். அதிமுக சார்பில் ஆதிராஜாராம், அமமுக சார்பில் ஜெ.ஆறுமுகம், மக்கள் நீதி மய்யம் சார்பில் ஜெகதீஷ்குமார், நாம் தமிழர் கட்சியில் கெமில்ஸ் செல்வா ஆகியோர் போட்டியிட்டனர்.
இந்நிலையில், தபால் வாக்குகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் மு.க.ஸ்டாலின் 3,199 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். அதிமுகவின் ஆதிராஜாராம் 1,445 வாக்குகள் பெற்றுள்ளார். 1,754 வாக்குகள் கூடுதலாகப் பெற்று ஸ்டாலின் முன்னிலையில் உள்ளார்.
2011, 2016 ஆகிய இரு தேர்தல்களிலும் கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.