காஞ்சிபுரம் சங்கர மடத்தின் ஸ்ரீ காரியமாக சல்லா விஸ்வநாத சாஸ்திரியும், காமாட்சி அம்மன் கோயில் ஸ்ரீகாரியமாக சுந்தரேச அய்யரும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
சங்கர மடத்தின் ஸ்ரீகாரியமாக செயல்பட்டு வந்த விஸ்வநாத அய்யர் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு உயிரிழந்தார். இந்நிலையில் காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் காமாட்சி அம்மன் கோயில் ஸ்ரீகாரியமாக இருந்த சல்லா விஸ்வநாத சாஸ்திரியை காஞ்சிபுரம் சங்கர மடத்தின் ஸ்ரீகாரியமாக நியமித்தார். இதைத் தொடர்ந்து சங்கர மடத்தின் மேலாளராக இருந்து வந்த சுந்தரேசஅய்யர் காமாட்சி அம்மன் கோயில் ஸ்ரீகாரியமாக நியமிக்கப்பட்டார். இவர்கள் இருவரும் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டனர்.