தமிழகம்

மாணவர்கள் போராட்டம் எதிரொலி: சென்னை பல்கலை விடுதி மூடல்; மின்சாரம் துண்டிப்பு

செய்திப்பிரிவு

மாணவர்கள் போராட்டம் காரணமாக சென்னை பல்கலைக்கழக நிர்வாகத்தின் மெரினா வளாக விடுதி மூடப்பட்டது. மாணவர்கள் வெளியேற மறுத்ததால் விடுதி யின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

சென்னை பல்கலைக்கழகத் தில் சில தினங்களுக்கு முன்பு பேரிடர் மேலாண்மை குறித்த கருத் தரங்கு நடந்தது. இதில் கேள்வி எழுப்பிய பிரான்ஸ் குடியுரிமை பெற்ற மாணவர் ஜோனஸ் ஆண்டன், பல்கலைக் கழக பணியாளர்கள் சிலரால் தாக்கப்பட்ட தாக கூறப்படுகிறது. ஆண்டனை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பல்கலைக்கழக மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து, பல்கலைக்கழ கத்துக்கு டிசம்பர் 16 முதல் ஜனவரி 3-ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டது. மேலும் சேப்பாக்கம் வளாக பெண்கள் விடுதியையும், மெரினா வளாகத்தில் உள்ள மாண வர்கள் விடுதியையும் பல்கலை நிர்வாகம் மூடியது. ஆனால், மெரினா வளாக விடுதியில் தங்கி யுள்ள மாணவர்கள் வெளியேற மறுத்து, அங்கேயே உணவு சமைத்து சாப்பிட்டு வந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் விடுதியின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மின்சாரம் இல் லாததாலும், தண்ணீர் விநி யோகம் தடைபட்டதாலும் மாண வர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர். இதனால் நேற்று விடுதி வளாகத்துக்குள் மாணவர்கள் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தினர். அவர்களிடம் போலீஸார் சமாதான முயற்சியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து மாணவர் பிரதிநிதி கள் ‘தி இந்து’விடம் கூறும்போது, ‘‘தற்போது இறுதி ஆண்டு பயிலும் மாணவர்கள் ப்ராஜக்ட் ரிப்போர்ட் தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் விடுதியை விட்டு வெளியேற்றுவது தவறான முடிவு. இதனால் பல்கலைக்கழக வேந்தரான தமிழக ஆளுநரை சந்தித்து முறையிட முடிவு செய்துள்ளோம். கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக சேப்பாக்கம் வளாகத்துக்கு விடுமுறை அளித் துள்ளதாகவும் மெரினா வளாக விடுதியை மூடியுள்ளதாகவும் பல்கலைக்கழக நிர்வாகம் கூறி யுள்ளது. சென்னை பல்கலைக் கழகத்தின் மற்ற (கிண்டி, தரமணி, சேத்துப்பட்டு, மதுரவாயல், மெரினா) வளாகங்களுக்கு ஏன் கிறிஸ்துமஸ் விடுமுறையை டிசம்பர் 16-ல் இருந்து அளிக்கவில்லை” என கேட்டனர்.

பல்கலைக்கழக நிர்வாகத்தின ரிடம் கேட்டபோது, “சேப்பாக்கம் வளாகத்தில் பயிலும் மாணவர் களில் சிலர் பல்கலைக்கழக வளாகத்துக்குள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அந்த வளாகத்துக்கு விடுமுறை அறிவித்து விடுதியை மூடியுள்ளது. விடுதியில் தங்கிக் கொண்டு போராட்டத்தை முன் னெடுப்பதால் விடுதியும் மூடப்பட் டுள்ளது. சிலர் சுயநலத்துக்காக மாணவர்களின் போராட்டத்தை தூண்டிவிடுகின்றனர். மாணவர் கள் படித்து முன்னேறுவதில் மட்டுமே ஈடுபாடு காட்ட வேண்டும்’’ என்றனர்.

மாணவர்கள் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தினர். அவர்களிடம் போலீஸார் சமாதான முயற்சியில் ஈடுபட்டனர்.

SCROLL FOR NEXT