தமிழகம்

பழிவாங்குவதை நிறுத்தாவிட்டால் ஆர்ப்பாட்டம் போராட்டமாக மாறும்: பாஜகவுக்கு இளங்கோவன் எச்சரிக்கை

செய்திப்பிரிவு

காங்கிரஸ் தலைவர்களைப் பழி வாங்கும் போக்கை பாஜக தொடர்ந்தால் தற்போது நடைபெறும் ஆர்ப்பாட்டம் பெரும் போராட்டமாக மாறும் என தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எச்சரித்துள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் மீது பொய் வழக்கு போடுவதாகக் கூறி மத்திய அரசைக் கண்டித்து மதுரையில் காங்கிரஸ் கட்சி சார் பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

இதில் மாவட்டத் தலைவர்கள் தங்கராஜ், ஜெயராமன், ரவிச்சந் திரன் உட்பட பலர் பங்கேற்றனர். இதற்கு தலைமை வகித்து மாநிலத் தலைவர் இளங்கோவன் பேசியதாவது:

கண்ணகிக்கு நீதி கிடைக்காத தால், மதுரை எரிந்தது. சோனியா காந்திக்கு நீதி கிடைக்காவிட்டால் இந்தியாவே பற்றி எரியும். குபேரர்களாக இருந்து அரசியலுக்கு வந்து எல்லாவற்றையும் இழந்தது நேரு குடும்பம். அவர்களுக்கென சொந்தமாக ஒரு வீடுகூட இல்லை என்பது மக்களுக்கு தெரியும். இந்தி யாவுக்காக தங்களின் உயிர்களை கொடுத்த குடும்பம். இந்த குடும்பம் இல்லாமல் இருந்திருந்தால், இந் தியா இன்னொரு பாகிஸ்தானாக மாறியிருக்கும்.

இத்தகைய தியாகம் செய்த குடும்பம் மீது சுப்பிரமணியன் சுவாமி மூலம் பிரதமர் மோடி பொய் வழக்கு தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் களைப் பழிவாங்க நினைக்கிறார். இதை அவர் உடனே நிறுத் திக்கொள்ள வேண்டும். இல்லா விட்டால், இது ஆர்ப்பாட்டமாக மட்டுமே இருக்காது. பெரும் போராட்டமாக மாறும். போராட் டத்தின் வடிவமே மாறும்.

தமிழக பாஜக தலைவர் தமி ழிசை சவுந்தரராஜன் காங்கிரஸை எப்போதும் தாக்கிப் பேசி வருகி றார். கரகாட்டம் ஆடுபவர்களுக்கும், பொய்க்கால் குதிரை ஆடுபவர் களுக்கும் பதில் சொல்ல மாட்டேன் என்றார்.

இதேபோல் திண்டுக்கல், தேனி, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய இடங்களிலும் காங்கிரஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

SCROLL FOR NEXT