மழை வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட தன்னார் வலர்களுக்கு ஈஷா அறக்கட்ட ளையின் சார்பில் பாராட்டு விழா நேற்று வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது.
இவ்விழாவில், சிறப்பு அழைப் பாளராக கலந்துகொண்ட ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் பேசியதாவது:
சென்னை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஈஷா தன்னார்வத் தொண்டர்கள் நேரடியாக சென்று, பல்வேறு நிவாரணப் பணிகளைச் செய்தனர். இதில், சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தொற்றுநோய்கள் ஏற்படாத வகை யில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. சென்னையில் 20 இடங்களிலும், கடலூரில் 13 இடங்களிலும் நடைபெற்ற மருத்துவ முகாம்களில் 1 லட்சத்து 98 ஆயிரம் பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இத்தகைய பேரிழப்பிலிருந்து மக்கள் மீள்வதற்கு நல்ல உள்ளம் படைத்த அனைவரும் கரங்கோர்த்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
வெள்ள நிவாரணப் பணி களில் ஈடுபட்ட பல்வேறு தன்னார் வத் தொண்டர்கள் கவுரவப்படுத் தப்பட்டனர்.
இவ்விழாவில் நடிகர் பார்த்திபன், நடிகை சுஹாசினி, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.