தமிழகம்

உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு ஒரு மாதம் கோடை விடுமுறை அறிவிப்பு: 8 நாள் விடுமுறை கால நீதிமன்றம் நடைபெறும்

கி.மகாராஜன்

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு இன்று (மே 1) முதல் 31 வரை கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.

இந்த மாதத்தில் 5, 6, 12,13, 19,20, 26, 27 ஆகிய 8 நாட்கள் விடுமுறை கால நீதிமன்றம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் கோடை விடுமுறையின் முதல் பகுதியில் மே 5, 6 ஆகிய நாட்களில் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், பி.புகழேந்தி ஆகியோர் முதலில் அமர்வாகவும், பின்னர் தனியாக ரிட் மனுக்களையும், விசாரிக்கின்றனர். நீதிபதி எஸ்.ஆனந்தி, ஜாமீன், முன்ஜாமீன் மனுக்களை விசாரிக்கிறார்.

இரண்டாம் பகுதியில் மே 12, 13 ஆகிய தேதிகளில் நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், டி.கிருஷ்ணவள்ளி ஆகியோர் முதலில் அமர்விலும், பின்னர் தனியாக ரிட் மனுக்களை விசாரிக்கின்றனர். நீதிபதி ஏ.ஏ.நக்கீரன், ஜாமீன், முன்ஜாமீன் மனுக்களை விசாரிக்கிறார்.

3-ம் பகுதியில் மே 19, 20 ஆகிய தேதிகளில் நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், என்.ஆனந்த வெங்கடேஷ் முதலில் அமர்வாகவும், பின்னர் தனியாக ரிட் மனுக்களையும் விசாரிக்கின்றனர். ஜாமீன், முன்ஜாமீன் மனுக்களை நீதிபதி ஜி.இளங்கோவன் விசாரிக்கிறார்.

4-ம் பகுதியில் மே 26, 27 ஆகிய தேதிகளில் நீதிபதிகள் வி.எம்.வேலுமணி, ஆர்.தாரணி ஆகியோர் முதலில் அமர்வாகவும், பின்னர் தனியாக ரிட் மனுக்களையும் விசாரிக்கின்றனர். நீதிபதி கே.முரளிசங்கர், ஜாமீன், முன்ஜாமீன் மனுக்களை விசாரிக்கிறார்.

கோடை விடுமுறை கால நீதிமன்றத்தில் காணொலி வழியாகவே விசாரணை நடைபெறும்.

SCROLL FOR NEXT