நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட சுதந்திர போராட்ட தியாகிகள், நாட்டுக்காக உயிர்துறந்தவர்களின் பட்டியலை தயாரிக்குமாறு அஞ்சல் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவர்கள் கவுரவிக்கப்படுவர் என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.
முதல் விடுதலை வீரர் அழகு முத்துக்கோன் அஞ்சல்தலை வெளி யீட்டு விழா மதுரை காந்தி அருங் காட்சியகத்தில் நேற்று நடைபெற்றது.
மத்திய மின்னணுவியல் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், அழகு முத்துக்கோன் நினைவு அஞ்சல் தலையை வெளியிட்டார். அதை மத் திய இணை அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன் பெற்றுக்கொண்டார்.
விழாவில் ரவிசங்கர் பிரசாத் பேசியதாவது: இந்தியா சுதந்திரம் அடைந்து 68 ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை பலரது அஞ்சல்தலைகள் வெளியிடப்பட்டுள்ளன. ஒரே குடும் பத்தைச் சேர்ந்த பலருக்கு அஞ்சல்தலை வெளியிட்டுள்ளனர். ஆனால், ஆங்கிலேயர்களை எதிர்த்து முதல் குரல் எழுப்பிய மாவீரன் அழகுமுத்துக்கோனுக்கு இதுவரை அஞ்சல்தலை வெளியிடாதது வேத னையை ஏற்படுத்துகிறது. இதற்காக அவரது குடும்பத்தினரிடம் மன்னிப்பு கோருகிறேன். இப்போது அவரது அஞ்சல்தலை வெளியிடுவது மகிழ்ச்சியாக உள்ளது. பாஜக அரசு பொறுப்பேற்றதும் இந்த கோரிக்கை வைத்திருந்தால் எப்போதோ அஞ்சல்தலை வெளியிட்டிருப்போம். அழகுமுத்துக்கோன் குறித்து வட மாநிலங்களுக்கு தெரியவைப்போம் என உறுதியளிக்கிறோம்.
பாஜக அரசு நாட்டுக்காக பாடுபட்ட அனைத்து புரட்சியாளர்களையும், சுதந்திர போராட்ட தியாகிகளையும், நாட்டுக்காக உயிர்துறந்தவர்களை யும் கவுரவித்து வருகிறது. நாட்டின் அனைத்து புரட்சியாளர்கள், தியாகி களின் பட்டியலை தயாரிக்குமாறு அஞ்சல்துறையை கேட்டுக்கொண் டுள்ளேன். அவர்கள் கவரவிக்கப்படு வர்.
தமிழகம், ஆந்திரம், கேரளத் தைச் சேர்ந்த புரட்சியாளர்கள், தியாகி களின் பட்டியலை அளிக்கலாம். திருவள்ளுவர், எம்.எஸ்.சுப்புலெட் சுமி, சுப்பிரமணியபாரதி, கணித மேதை ராமானுஜம் ஆகியோரின் அஞ்சல்தலைகள் வெளியிட்டுள் ளோம். ஓட்டுக்காக இதனை நாங்கள் செய்யவில்லை.
பாஜக அரசில் இந்தியாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தி அதி கரித்துள்ளது. இந்த 5 ஆண்டுகளில் இந்தியா பெரிய, சிறந்த, வளர்ச்சி யடைந்த நாடாக மாறும் என்றார்.
பாஜக தேசியப் பொதுச் செயலர் முரளிதர்ராவ், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட பலர் பேசினர். விழா ஏற்பாடுகளை யாதவர் தன்னுரிமை பணியகம் செய்திருந்தது.
ஜல்லிக்கட்டு நடைபெறும்
விழாவில், மத்திய அமைச் சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசும்போது, ‘தமிழகத்தில் இந்தாண்டு ஜல்லிக்கட்டு கண்டிப்பாக நடைபெறும். இதற்கான சட்ட சிக்கல்கள், பிரச்சினைகளைக் களைவது தொடர்பாக தீவிர ஆலோசனை கள் நடைபெற்று வருகின்றன என்றார்.