`வெள்ள நிவாரணப் பணிகளை அரசியலாக்கக் கூடாது’ என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்தார்.
தூத்துக்குடியில் மழை வெள்ளத் தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை விஜயகாந்த் நேற்று பார்வையிட் டார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, வேட்டி, சேலை உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கி ஆறு தல் கூறினார். பின்னர் விஜயகாந்த் கூறும் போது, ‘மழை வெள்ளத்தால் தமிழகத்தில் சென்னை, திருவள் ளூர், காஞ்சிபுரம், கடலூர் மாவட் டங்கள் கடுமையாக பாதிக்கப்பட் டுள்ளன. தூத்துக்குடி மாவட்டத் தில் தூத்துக்குடி பகுதியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வெள்ள நிவாரணப் பணிகளை அரசியலாக்கக் கூடாது. அதேநேரத் தில் அரசின் நடவடிக்கைகளில் திருப்தி இல்லை.
தமிழகத்தில் மழை வெள்ளத் தால் பேரிடர் ஏற்படும் என மத்திய அரசு கடந்த அக்டோபர் மாதம் எச்சரிக்கை விடுத்தது. ஆனால் தமிழக அரசு அதை அலட்சியம் செய்ததால்தான் இந்த பாதிப்பு.
தூத்துக்குடி பகுதியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு உப்பாற்று ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகளே காரணம். உப்பாற்று ஓடையில் பல தனியார் நிறுவனங்கள் ஆக்கிர மிப்பு செய்துள்ளன. தமிழகம் முழுவதிலுமே ஓடைகள், கால்வாய் களை முக்கிய அரசியல் கட்சி யினர் அதிகமாக ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்’ என்றார் அவர்.
பொதுமக்கள் புகார்
திருவிக நகரில் விஜயகாந்த் நிவாரண உதவி அளித்தபோது பொதுமக்கள் அவரை சூழ்ந்து, ‘இந்தப் பகுதியில் அனைவருமே பாதிக்கப்பட்டுள்ளோம். ஒருசில ருக்கு மட்டும் நிவாரணம் வழங்கு வது ஏன்?’ என கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த விஜயகாந்த், ‘சென்னை, கடலூரில் அதிகம்பேர் பாதிக்கப்பட்டு, அங்கு நிவாரண உதவிகளை செய்து வருகிறோம். அது முடிந்த பிறகு இங்குள்ள அனைவருக்கும் நிவாரணம் வழங்குவோம்’ என்றார்.
நிவாரண உதவிகளை வழங்கிய போது போட்டோவுக்கு போஸ் கொடுக்க முன்னால் வந்த கட்சி நிர்வாகி ஒருவரை விஜயகாந்த் அடிக்க முயன்றதால் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் அவரே அந்த நிர்வாகியை சமாதானம் செய்தார்.