கும்பகோணத்தில் 2004, ஜூலை 16-ல் தனியார் பள்ளி யில் நேரிட்ட தீ விபத்தில் 94 குழந் தைகள் உயிரிழந்தனர். 18 குழந் தைகள் பலத்த தீக்காயமடைந் தனர். பாதிக்கப்பட்ட பெற்றோ ருக்கு தமிழக அரசின் சார்பில் அப்போது, தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது.
ஆனால், உரிய இழப்பீடு கோரி கும்பகோணம் பள்ளித் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட பெற் றோர் சங்கம் சார்பில் அளித்த மனுவை ஏற்ற சென்னை உயர் நீதிமன்றம், ஒய்வு பெற்ற நீதிபதி வெங்கட்ராமன் தலைமையில் இழப்பீடு நிர்ணய விசாரணைக் கமிஷன் அமைத்தது. விசாரணை முடிந்த பின்னரும், கமிஷன் அறிக்கை தாக்கல் செய்யப்பட வில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெற்றோர் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில், “நீதிபதி வெங்கட்ராமன் தலைமையிலான விசாரணைக் கமிஷன், பாதிக்கப் பட்ட ஒவ்வொரு குடும்பத்தி னருக்கும் எவ்வளவு இழப்பீடு வழங்க வேண்டும் என விசாரித்து, 6 மாத காலத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அந்த 6 மாத காலத்தில் பாதிக்கப்பட்ட 50 குடும்பத்தினரிடம் மட்டுமே கமிஷன் விசாரணை செய்தது. இதனால், மேலும் 6 மாதம் நீட்டிப்பு செய்ய உயர் நீதிமன்றம் அனுமதித்தது. அதன்படி, அனை வரிடமும் நவம்பர் 23-ம் தேதியே கமிஷன் விசாரணை செய்து முடித்துவிட்டது.
ஏற்கெனவே, அரசால் நிய மிக்கப்பட்ட நீதிபதி சம்பத் கமிஷன் அறிக்கையில், இந்த தீ விபத்துக்கு யார் காரணம் என்று தமிழக அரசுக்கு அறிக்கை அளித்துவிட்டது. அந்த அறிக் கையை அரசு முழுமையாக ஏற்றுக் கொண்டுவிட்டது. குற்ற வாளிகளாக அறிவிக்கப்பட்டவர் கள் தண்டனை அனுபவித்து வரு கின்றனர்.
இந்நிலையில், நீதிபதி வெங் கட்ராமன் கமிஷன் குற்றம் சாட்டப் பட்டவர்களிடம் மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என முடிவு செய்துள்ளது. இதனால், பாதிக்கப்பட்ட எங்களுக்கு இழப் பீடு கிடைப்பதில் மேலும் தாமதம் ஏற்படும். எனவே, உடனடியாக விசாரணைக் கமிஷன் அறிக் கையை தாக்கல் செய்து, உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர்.