கோவில்பட்டி பகுதியில் வாட்ஸ்-அப் ஆடியோ ஒன்று கடந்த சில தினங்களாக வைரலாகி வருகிறது. அதில் பேசும் பெண்மணி ஒருவர், “வார்டுகள்ல பணம் ஒழுங்கா போய் சேர்ந்த மாதிரி தெரியலையே... கொடுத்த பணத்தை எல்லாம் என்ன செஞ்சீங்க?” என தெலுங்கில் அதிமுக நிர்வாகி ஒருவரை ஒருபிடி பிடிக்கிறார். இந்தக் குரலுக்குச் சொந்தக்காரர் அமைச்சர் கடம்பூர் ராஜுவின் மனைவி தான் என அமமுக வட்டாரம் தங்கள் பங்கிற்கு வாட்ஸ்-அப்பில் செய்தி பரப்பி வருகிறது. ஆனால், உண்மையில் அந்த ஆடியோவில் பேசியது அதிமுகவின் மகளிரணி நிர்வாகி ஒருவராம். ஆடியோ விவகாரத்தால் அப்செட்டில் இருக்கும் கடம்பூரார், “கோயில், குளம்னு சுத்தி வர்ற என் மனைவியை இதுல தேவையில்லாம இழுத்துவிடுறாங்களே” என்று ரொம்பவே நொந்துபோய்க் கிடக்கிறாராம்.