திருப்பத்தூர் நகராட்சியில் சேகரிக் கப்படும் குப்பைக்கழிவுகள் எரிக்கப்படுவதால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவ தாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
திருப்பத்தூர் நகராட்சியில் உள்ள 36 வார்டுகளிலிருந்தும் தினசரி 10 டன் குப்பைக்கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. நகராட்சி சார்பில் 5 இடங்களில் திடக் கழிவுமேலாண்மை திட்டம் செயல்படுத் தப்பட்டு வந்தாலும், நகராட்சி தூய்மைப்பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்படும் குப்பைக் கழிவுகள் திருப்பத்தூர் - தி.மலை சாலையில் உள்ள மயானப்பகுதியையொட்டி கொட்டப்பட்டு அங்கேயே தீ வைத்து எரிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறும்போது, ‘‘திருப்பத்தூர் - தி.மலை சாலையில் வெங்களாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட மயானப்பகுதி உள்ளது. இந்நிலை யில், திருப்பத்தூர் நகராட்சி யில் சேகரிக்கப்படும் குப்பைக்கழிவுகள் மயானப் பகுதிக்கு செல்லும் வழியிலேயே கொட்டப் படுவதால் துர்நாற்றம் வீசுகிறது.
மேலும், நகராட்சி ஊழியர்களே குப்பைகளுக்கு தீ வைத்து எரிப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஏற்படும் புகை மூட்டத் தால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படு கிறது. குப்பையை எரிக்கும் போது அதிலிருந்து ஏற்படும் கரும்புகை கண் எரிச்சல், மூச்சுத் திணறல், தோல் அரிப்பு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
இது குறித்து நகராட்சி துப்புரவு அலுவலர் மற்றும் ஆய்வாளரிடம் பல முறை எடுத்துக்கூறியும் அவர்கள் நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை. இப்பிரச்சினை தொடர்ந்தால் நகராட்சி அலுவ லகத்தை முற்றுகையிட்டு போராட் டத்தில் ஈடுபடவும் தயங்க மாட் டோம்’’ என்றனர்.
இதுகுறித்து திருப்பத்தூர் நகராட்சி துப்புரவு அலுவலர் ராஜரத்தினம் கூறும்போது, ‘‘திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகர், கலைஞர் நகர், அபாய் தெரு, நகராட்சி அலுவலகம் மற்றும் ப.உ.ச. நகர் என மொத்தம் 5 இடங்களில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மையமும் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்டு அங்கு குப்பைக்கழிவுகள் தரம் பிரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
எனவே, நகராட்சியில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைக் கழிவுகள் வெங்களாபுரம் மயானப் பகுதியில் கொட்ட வேண்டிய அவசியம் இல்லை என கருது கிறேன். இருந்தாலும் பொது மக்கள் தெரிவிக்கும் புகார் மீது உடனடியாக ஆய்வு நடத்தி அப்பிரச்சினையை சரி செய்ய ஓரிரு நாளில் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.