தமிழகம்

ஹாட் லீக்ஸ்: அனிதாவுக்கு அணைபோடும் பண்ணையார்!

செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்ட திமுக பிரபலங்களான, முன்னாள் அமைச்சர்கள் கீதா ஜீவனும் அனிதா ராதாகிருஷ்ணனும் இந்த முறை தங்களுக்கு அமைச்சர் பதவி நிச்சயம் என்ற நினைப்பில் இருக்கிறார்கள். இருவருமே கனிமொழியை பெரிதும் நம்புகிறார்களாம். இதனிடையே, “அனிதாவை தோற்கடிக்க ஏகப்பட்ட உள்ளடி வேலைகளைப் பார்த்த பனங்காட்டு மக்கள் கழக தலைவர் சுபாஷ் பண்ணையார், “அனிதா ஜெயித்தாலும் அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கவிட மாட்டோம்” என்று மீசையை முறுக்குகிறாராம். தமக்கு ஏதும் பிரச்சினை இல்லை என்பதால், “நமக்கு எந்த இலாகா கிடைக்கும்?” என அடுத்த கட்ட சிந்தனைக்குப் போய்விட்டதாம் கீதா ஜீவன் வட்டாரம்.

SCROLL FOR NEXT