தமிழ் அறிஞரும், பாரதி ஆய்வாளரும், ஸ்ரீராமகிருஷ்ணர் - சுவாமி விவேகானந்தர் பற்றி ஆய்வுநூல்களை எழுதிய வருமானபெ.சு.மணி (87) சென்னை மேற்கு மாம்பலத்தில் வசித்து வந்தார். டெல்லி சென்றிருந்த அவர், வயது முதிர்வால் ஏற்பட்ட உடல் நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார். சில ஆண்டுகளுக்கு முன்பு அவரது மனைவி காலமாகி விட்டார். பழந்தமிழ் இதழ்கள், வீரமுரசு சுப்பிரமணிய சிவா உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.