வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் மற்றும் வெளியூர் நபர்கள் வரு கைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அரசுப் பேருந்துகள் மூலம் சுற்றுலா பயணிகள் செல்வ தாக எழுந்த புகாரின் பேரில், ஆழியாறு சோதனைச்சாவடியில் போலீஸார் பயணிகளின் அடை யாள ஆவணங்களை ஆய்வு செய்தனர்.
தமிழகத்தில் கரோனா பரவ லைத் தடுக்க தமிழக அரசு பல்வேறுநடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட் டுள்ளது. கோவை மாவட்டம் வால்பாறைக்கு தமிழகத்தின் பல்வேறுமாவட்டங்களில் இருந்து வருபவர் கள் ஆழியாறு சோதனைச்சாவடி வழியாகவும், கேரளாவில் இருந்து வருபவர்கள் சோலையாறு சோதனைச் சாவடி வழியாகவும் செல்ல வேண்டும். இவ்விரு சோதனைச்சாவடிகளிலும் 24 மணி நேரமும் போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, சுற்றுலா வாகனங்களை திருப்பி அனுப்பி வரு கின்றனர்.
வால்பாறையில் வசிப்பவர்கள் பயணத்தின்போது, ஆதார் அட்டைஅல்லது வசிப்பிட ஆதாரத்துக்கான ஏதாவது ஓர் ஆவணம் வைத்திருக்க வேண்டும் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி சார் ஆட்சியர்ரா.வைத்திநாதன் உத்தரவின் பேரில் வால்பாறை வட்டாட்சியர் ராஜா, டிஎஸ்பி விவேகானந்தன், வட்டார மருத்துவ அலுவலர் பாபு ஆகியோர் அடங்கிய தொற்று பரவல் கட்டுப்படுத்தும் குழுவினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், பொள்ளாச்சியி லிருந்து வால்பாறைக்கு இயக்கப் படும் பேருந்துகளில் வெளியூர் நபர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள்கட்டுப்பாடுகளை மீறி பயணிப்ப தாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, ஆழியாறு சோதனைச் சாவடியில் பேருந்துகளை நிறுத்தி, பயணிகளிடம் ஆதார் அட்டை மற்றும் வால்பாறையில் வசிப்பதற்கான அடையாள அட்டைகள் ஆகியவற்றை போலீஸார் வாங்கி பரிசோதித்தனர்.
வால்பாறைக்கு விதிமுறை களை மீறி வந்த சுற்றுலா பயணி களை திருப்பி அனுப்பினர். மேலும் பேருந்தில் தனி மனித இடைவெளி கடைபிடிக்கப் படுகிறதா என்பதையும் ஆய்வு செய்தனர்.