தமிழகம்

மாசாணியம்மன் கோயிலில் பொட்டலம் மூலம் அன்னதானம்

செய்திப்பிரிவு

கரோனா பரவலின் இரண்டாம் அலை காரணமாக மாசாணியம்மன் கோயிலில் தினந்தோறும் நடைபெறும் அன்னதானத்தில் வழங்கப்பட்ட உணவு பக்தர்களின் நலன் கருதி பொட்டலங்களாக வழங்கப்படுகின்றன.

கரோனா தொற்று நாள்தோறும் அதிகரித்து வருவதால் கடந்த 26-ம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டுக்கு இந்து சமய அறநிலையத் துறை அனுமதி மறுத்துள்ளது. அத்துடன் கோயில்களில் தினமும் நடைபெறும் பூஜைகளை பக்தர்களின்றி அர்ச்சகர்கள் நடத்துவதற்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், கோயில் வளாகத்தில் உணவு மேஜை அமைத்து நடைபெற்று வந்த அன்னதானமும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாகபொட்டலங்களாக உணவு வழங்கப்பட்டு வருகிறது. கோவை மாவட்டம் ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் நாள்தோறும் 100 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. கரோனா தொற்று கட்டுப்பாட்டால் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி தற்போது கலவை சாதம் பொட்டலமாக கட்டி பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

இது குறித்து மாசாணியம் மன் கோயில் உதவி ஆணையர்கருணாநிதி கூறும்போது, ‘‘கரோனா பரவலைத் தடுக்கும் நோக்கத்துடன், அரசின் வழிகாட்டுநடைமுறைகளை பின்பற்றி தினந் தோறும் எலுமிச்சை சாதம், தக்காளி சாதம் உள்ளிட்ட கலவை சாதங்கள் அன்னதானப் பொட்டலங்களாக வழங்கப்படுகின்றன” என்றார்.

SCROLL FOR NEXT