உரம் விலை உயர்வைக் கண்டித்து உத்திரமேரூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
உத்திரமேரூர் பேருந்து நிலையம் அருகே நேற்று முன்தினம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, விவசாய சங்க மாவட்டச் செயலர் கே.நேரு தலைமை வகித்தார். கரும்பு விவசாயிகள் சங்க மாநிலத் துணைத் தலைவர் பெருமாள், மாவட்டத் துணைத் தலைவர் நந்தகோபால், உத்திரமேரூர் விவசாய சங்கச் செயலர் பெருமாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, "கடந்த 70 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு உரம் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். எனவே, உரம் விலையைக் குறைக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.