தமிழகம்

பணிக்கால முறைகேடு புகார்கள்: சுரப்பாவிடம் நேரடியாக விசாரணை நடத்த முடிவு

செய்திப்பிரிவு

பணிக்கால முறைகேடு புகார்கள் தொடர்பாக, முன்னாள் துணைவேந்தர் சுரப்பாவை நேரடி விசாரணைக்கு அழைக்க ஆணையம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எம்.கே.சுரப்பா மீது ரூ.280 கோடி ஊழல் குற்றச்சாட்டு புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக ஒய்வுபெற்ற நீதிபதி பி.கலையரசன் தலைமையிலான 7 பேர் கொண்ட ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. தற்போது அவர் மீது புகார் அளித்தவர்கள் மற்றும் சாட்சிகளிடம் இறுதிக்கட்ட விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் முடிந்தபின் சுரப்பாவை விசாரணைக்கு அழைக்க ஆணையம் முடிவு செய்துள்ளது. இதற்கான நோட்டீஸ் விரைவில் சுரப்பாவுக்கு அனுப்பப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து விசாரணைக் குழு அதிகாரிகள் சிலர் கூறும்போது, “சுரப்பா ஓய்வு பெற்றுவிட்டாலும், அவர் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது பல்கலைக்கழக அதிகாரிகள், சாட்சிகளிடம் வாக்குமூலம் பெறும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இது முடிந்தபின் சுரப்பாவிடம் நேரடி விசாரணை நடத்தப்படும். அப்போது அவர் தனது விளக்கத்தைக் கூறலாம்.

இது தொடர்பாக சுரப்பாவுக்கு விரைவில் நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது. மேலும், திட்டமிட்ட காலத்துக்குள் விசாரணையை முடித்து அரசிடம் அறிக்கை சமர்பிக்கப்படும். எனவே, விசாரணைக் குழுவுக்கு கால நீட்டிப்பு தேவையில்லை” என்றனர்.

SCROLL FOR NEXT