ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் பகுதியில் படப்பிடிப்புக்காக வந்த நடிகர் சாந்தனு பாக்யராஜ் கிராம மக்களுக்கு கபசுரக் குடிநீர், முகக்கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
முதுகுளத்தூர் அருகே கிடாத்திருக்கை, ஏனாதி, பொதிகுளம் கிராமப் பகுதிகளில் நடிகர் சாந்தனு பாக்யராஜ் நடிக்கும் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
அப்போது அப்பகுதி கிராமத்தினருக்கு கபசுரக் குடிநீர் முகக் கவசங்களை வழங்கிய நடிகர் சாந்தனு பாக்யராஜ் பின்னர் ஒலிப்பெருக்கியில் கரோனா பரவும் முறை, பாதுகாத்துக் கொள்ளும் முறை குறித்து பேசினார்.
நிகழ்ச்சியில் கிடாத்திருக்கை ஊராட்சித் தலைவர் ராஜலட்சுமி, ஏனாதி ஊராட்சித் தலைவர் பாரதிதாசன், பொதிகுளம் தலைவர் லெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.