தமிழகம்

தொழிலதிபர் எம்.ஏ.எம்.ராமசாமி மரணம்

செய்திப்பிரிவு

பிரபல தொழிலதிபரான எம்.ஏ.எம்.ராமசாமி உடல் நலக்குறைவால் சென்னையில் நேற்று காலமானார். அவரது இறுதிச் சடங்கு சென்னை மயிலாப்பூர் மயானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது.

செட்டிநாடு குழுமங்களின் முன்னாள் தலைவரும் பிரபல தொழிலதிபருமான எம்.ஏ.எம்.ராமசாமிக்கு கடந்த சில மாதங்களாக உடல் நிலை சரியின்றி அவதிப்பட்டு வந்தார். எனவே, சிகிச்சைக்காக சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் 2.30 மணியளவில் மரணம் அடைந்தார். 84 வயதாகும் எம்.ஏ.எம்.ராமசாமி, ரத்த கொதிப்பு மற்றும் சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்ததால் கடந்த மாதம் 7-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு வாரத்தி லேயே, அவர் சுய நினைவை இழந்தார். இதையடுத்து அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. இந்த சூழலில், மருத்துவ சிகிச்சை பலனின்றி எம்.ஏ.எம்.ராமசாமியின் உயிர் பிரிந்தது. தொழிலதிபர் எம்.ஏ.எம்.ராமசாமி சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனது அரண்மனையில் தனித்து வாழ்ந்து வந்தார். இவரது இறுதிச்சடங்குகள் வரும் ஞாயிற்றுக்கிழமை (டிச.6) நடைபெறும் என அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT