கூடங்குளம் மின் உற்பத்தியில் பெரும்பகுதி தமிழகத்திற்குக் கிடைக்க தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.வாசன் கூறியதாவது:
மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது ராஜபக்சேவின் உண்மையான முகத்தைக் காண்பிக்கிறது.
கூடங்குளம் மின் உற்பத்தியில் பெரும்பகுதி தமிழகத்திற்கு கிடைக்க ஜெயலலிதா அரசு மத்திய அரசை வலியுறுத்தவேண்டும்.
மின் பற்றாக்குறையைப் போக்க தமிழக அரசு சீரிய நடவடிக்கை எடுப்பது அவசியம்.
காற்றாலை மின் உற்பத்தியைப் பெருக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். என்று வலியுறுத்தினார் ஜி.கே.வாசன்.