வேலை நேரம் குறைக்கப்பட்டதால் வங்கிகள் முன் கரோனா விதிமுறை களைப் பின்பற்றாமல் சமூக இடைவெளியின்றி வாடிக்கை யாளர்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா பரவல் இரண்டாவது அலை காரணமாக பல கட்டுப்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் விதித்துள்ளன. வங்கிகளின் வேலைநேரம் குறைக் கப்பட்டுள்ளது. காலை 10 முதல் பகல் 2 மணி வரை மட்டுமே செயல் படும் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து நேற்று தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் வாடிக்கையாளர்களின் கூட்டம் அதிக எண்ணிக்கையில் காணப் பட்டது. பணப் பரிவர்த்தனை உள் ளிட்ட பணிக்காக பொதுமக்கள் நீண்டவரிசையில் சமூக இடை வெளியின்றி நீண்டநேரம் காத்தி ருந்து தங்கள் பணிகளை முடித் தனர். திண்டுக்கல், பழநி, வேட சந்தூர் உள்ளிட்ட ஊர்களில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி களில் இந்தநிலை காணப்பட்டது.
வங்கிகளுக்கு வரும் பொது மக்களுக்கு வெப்பநிலை பரிசோதிப்பது, சானிடைசர் வழங்குவது என எந்தப் பணியும் பெரும்பாலான வங்கிகளில் கடைப்பிடிக்கப்படவில்லை. வங் கிக்கு வந்தவர்களில் சிலர் முகக் கவசத்தை அணியாமல் தங்கள் சட்டைப்பைகளில் வைத்துக் கொண்டனர். வங்கிகளுக்கு வரும் பொது மக்கள் கண்டிப்பாக கரோனா விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். வங்கிக் காவலாளி உள்ளிட்டோர் இதைக் கண்காணிக்க வேண்டும் என முகக்கவசம் அணிந்து வந்தோர் தெரிவித்தனர்.திண்டுக்கல் மாவட்டத்தில் வங்கி கள் செயல்படும் நேரத்தில் கரோனா கட்டுப்பாடுகளை வாடிக்கையாளர்கள், வங்கி ஊழி யர்கள் பின்பற்றுகின்றனரா என கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.