தமிழகம்

தமிழக அரசின் அறிவியல் விருதுகளுக்கு டிசம்பர் 31 வரை விண்ணப்பிக்கலாம்

செய்திப்பிரிவு

அறிவியல் தொடர்பான தமிழக அரசின் விருதுகளுக்கு இம்மாதம் 31-ம் தேதி வரை விண்ணப் பிக்கலாம் என அறிவியல் நகர துணைத் தலைவர் தெரிவித் துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கடந்த 2014-ம் ஆண்டுக்கான ‘தமிழ்நாடு இளம் அறிவியல் ஆய்வாளர் விருது’ மற்றும் ‘தமிழ்நாடு வாழ்நாள் அறிவியல் சாதனையாளர் விருது’களுக்கான விண்ணப்பப் படிவங்கள், விதிகள் அறிவியல் நகர இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வந்த கனமழை மற்றும் வெள்ள பாதிப்புகளால் பல மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு கடந்த 13-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டது. இதைக் கருத்தில் கொண்டு அறிவியல் நகரம் வழங்கும் விருதுக்கான பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை டிசம்பர் 31-ம் தேதி மாலை 5.45 வரை வழங்க கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.

SCROLL FOR NEXT