தமிழகம்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உயர் நீதிமன்ற பணியாளர்கள் 1,400 பேருக்கு நிவாரண பொருட்கள்: தலைமை நீதிபதி வழங்கினார்

செய்திப்பிரிவு

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உயர் நீதிமன்றப் பணியாளர்கள் 1,400 பேருக்கு அரிசி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நிவாரணப் பொருட்களை தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் வழங்கினார்.

கடந்த வாரம் பெய்த கன மழையால் சென்னை, புறநகர் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. ஆயிரக்கணக்கானவர்கள் வீடு, உடமைகளை இழந்து தவிக்கின்ற னர். சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றும் பணியாளர்களும் வெள்ள பாதிப்பில் இருந்து தப்ப வில்லை. பாதிக்கப்பட்ட அவர் களுக்கு உயர் நீதிமன்ற வளாகத்தில் நிவாரணப் பொருட்களை தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் நேற்று வழங்கினார். அரிசி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பொருட்களைக் கொண்ட பைகள், மொத்தம் 1,400 பேருக்கு வழங்கப்பட்டன.

அப்போது நிருபர்களிடம் தலைமை நீதிபதி கூறும்போது, “இப்போது வழங்கப்பட்டது மட்டு மல்லாமல் தேவைப்படும் அனை வருக்கும் நிவாரணப் பொருட் கள் வழங்கப்படும். மேலும், வெள் ளத்தில் சீருடை உள்ளிட்டவற்றை இழந்தவர்களுக்கு உடனடியாக அவற்றை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

நீதிபதி ஆர்.சுதாகர் கூறும்போது, ‘‘உயர் நீதிமன்றத்தைப்போல மாவட்ட நீதிமன்றங்கள், சார்பு நீதிமன்றங்களில் பணியாற்றும் பணி யாளர்களில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் படிப்படியாக நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT