தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வந்து செல்லும் வாகனங்கள் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையையும் கோவளம் மார்க்கமாக இயக்கப் படும் வாகனங்கள் கிழக்கு கடற் கரைச் சாலையையும் பயன்படுத் துவதற்கு வசதியாக தற்காலி கமாக சீரமைக்கப்பட்டுள்ளன. இதனால், அச்சமின்றி வாகனங் களை இயக்கலாம் என காஞ்சி புரம் மாவட்ட எஸ்பி முத்தரசி தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் ஏரி, குளங்கள் நிறைந்து உபரிநீர் வெளியேறி வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ் சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலைகளில் போக்குவரத்து நிறுத் தப்பட்டது. மேலும், தென் மாவட்டங் களில் இருந்து சென்னை நோக்கி வந்த பேருந்துகள் அனைத்தும் மேல்மருவத்தூர் அருகே வந்த வாசி சாலையில் திருப்பிவிடப் பட்டு காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் வழியாக சென்னை கோயம்பேட் டுக்கு சென்று வந்தன.
இந்நிலையில், நெடுஞ்சாலை துறை மற்றும் வருவாய்துறை யினர் சேதமடைந்த சாலை களை தற்காலிகமாக சீரமைத்துள் ளதால், வாகன போக்குவரத்து மீண்டும் தொடங்கியுள்ளது.
எனினும், தென்மாவட்டங் களுக்கு செல்லும் பாதைகள் சீரமைக்கப்பட்டுள்ள தகவல்கள் முறையாக வாகன ஓட்டிகளுக்கு சென்றடையாததால், அப்பகுதியி லிருந்து வரும் பேருந்துகள் காஞ்சி புரம் மாவட்டத்தின் உள்ளே வர தயக்கம் காட்டுவதாக வெளி மாவட்ட பயணிகள் புகார் தெரிவித் தனர்.
இதையடுத்து, மாவட்ட எஸ்பி முத்தரசி தேசிய நெடுஞ்சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலை களில் ஆய்வு மேற்கொண்டு வாகன போக்குவரத்துக்கு ஏற்ற வாறு சாலைகள் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்தார். இதனால் இந்த சாலைகள் வழியே வாகனங்கள் சென்னைக்கு தங்கு தடையின்றி செல்லலாம் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, எஸ்பி கூறிய தாவது: மாவட்டத்தில் முக்கிய சாலைகள், வாகன போக்குவரத் துக்கு ஏற்றவாறு தற்காலிகமாக சீரமைக்கப்பட்டுள்ளது. அதனால், தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வரும் வாகனங்கள் அனைத்தும் அச்சமின்றி செல்லலாம். மேலும், முக்கிய சாலைகளின் அருகே உள்ள ஏரி மற்றும் ஆறுகளில் வெளியேறும் தண்ணீரின் அளவுக்கேற்ப போக்குவரத்து மாற்றம் செய்யப்படலாம் என்றார்.