கீழ்பவானி வாய்க்காலில் கண்டெடுக்கப்பட்ட கிருஷ்ணர் சிலை. 
தமிழகம்

கீழ்பவானி வாய்க்காலில் கிருஷ்ணர் சிலை கண்டெடுப்பு

செய்திப்பிரிவு

சத்தியமங்கலம் அருகே கீழ்பவானி வாய்க்காலில் கிருஷ்ணர் சிலை கண்டெடுக்கப்பட்டது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் எரங்காட்டூர் பகுதி வழியாகச் செல்லும் கீழ்பவானி வாய்க்காலில், கிருஷ்ணர் சிலை ஒன்று கிடப்பதாக அப்பகுதி பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர்.

அங்கு வந்த கிராம நிர்வாக அலுவலர் சிலம்பரசன் சுவாமி சிலையை மீட்டு, சத்தியமங்கலம் வட்டாட்சியர் ரவி சங்கரிடம் ஒப்படைத்தார்.

சிலையை பெற்ற வட்டாட்சியர், கிருஷ்ணர் சிலையின் அளவு மற்றும் வெள்ளி உலோகமா என்பது குறித்து அருகே உள்ள நகைக் கடையில் ஆய்வு செய்தார். சுவாமி சிலை 2 அடி உயரம் சுமார் 4 கிலோ 600 கிராம் எடை இருந்தது தெரியவந்தது.

சுவாமி சிலை வெள்ளியால் ஆனது அல்ல என்றும், அலுமினியம், ஈயம் போன்ற உலோகங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டு வெள்ளிமுலாம் பூசப் பட்டுள்ள தாகவும் நகைக் கடை உரிமை யாளர் தெரிவித் தார்.

கோயி லில் இருந்து கிருஷ்ணர் சிலையைத் திருடிய திருடர்கள், அது வெள்ளி இல்லை என்பதால் போட்டுவிட்டுச் சென்றனரா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT