ஆக்சிஜன் முகக்கவசம் அணிந்துள்ள பேராசிரியர் ஆரோக்கியதாஸ். 
தமிழகம்

கரோனாவை துரிதமாக கண்டறியும் கருவி, ஆக்சிஜன் முகக்கவசம்: மதுரை காமராசர் பல்கலைக்கழக பேராசிரியர் உருவாக்கி சாதனை

என். சன்னாசி

கரோனா தொற்றை துரிதமாகக் கண்டறியும் கருவியையும், ஆக் சிஜன் முகக் கவசத்தையும் பேராசிரியர் ஒருவர் உருவாக்கி உள்ளார்.

கரோனா தொற்றை துரித மாகக் கண்டறிய நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய பரிசோதனைக் கருவியை மதுரை காமராசர் பல்கலைக் கழக இயற்பியல் துறை பேராசிரியர் ஆரோக்கியதாஸ் உருவாக்கி உள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:

வழக்கமான ஆர்டிபிசிஆர் பரிசோதனையில் 75 சதவீதம் பாதிப்பு தெரியும். நான் உருவாக்கிய கருவியில் 12 வினாடிகளில் 99 சதவீதம் பாதிப்பை கண்டறியலாம். இதற்கான காப்புரிமை பெறப்பட்டுள்ளது. இக்கருவியை மத்திய, மாநில அரசுகள், தனியார் நிறுவனங்கள் தயாரிக்க முன்வரும்போது மக்கள் பயன்பாட்டுக்கு விரைவில் வரும். மேலும் நானோ தொழில்நுட்பத்தில் ஆக்சிஜன் முகக் கவசத்தைக் வடிவமைத்துள்ளோம். இதில் நாம் சுவாசிக்கும் கார்பன்-டை ஆக்சைடை வெளியேற்றி ஆக்சிஜன் கிடைக்கும்படி செய்துள்ளோம்.

கரோனா பாதிப்பால் மூச்சுத் திணறல் ஏற்பட்டால் மருத்துவ மனை செல்லும் வரை இந்த முகக் கவசம் உதவும்.

இந்த முகக் கவசம் சென்சார் தொழில்நுட்பம் இன்றி 20.9 சதவீதம் முதல் 33 சதவீதம் வரை ஆக்சிஜன் தரும். மலைப் பகுதிகளில் வேலை செய்வோர், ராணுவ வீரர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

துணைவேந்தர் எம்.கிருஷ்ணன், மதுரை மருத்துவக் கல்லூரி டீன் சங்குமணி ஆகியோர் கருவியை ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கியுள்ளனர் என்றார்.

SCROLL FOR NEXT