தமிழகம்

அதிமுக எம்.பி. விஜயகுமாருக்கு கரோனா: குமரியில் தீவிரமடையும் தொற்றால் மக்கள் அச்சம்

எல்.மோகன்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில் விஜயகுமார் எம்.பி. கரோனால் பாதிக்கப்பட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை 5,22,156 பேருக்கு கோவிட் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இதில் 20 ஆயிரம் பேருக்கு மேற்பட்டோரக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது 1232 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர்.

இதில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மட்டும் 377 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கோவிட் கவனிப்பு மையம், மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 673 பேரும், வீட்டு தனிமைப்படுத்தலில் 182 பேரும் சிகிச்சையில் உள்ளனர்.

குமரியில் இன்று மட்டும் 183 பேர் கரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 பேர் மரணமடைந்தள்ளனர். அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் விஜயகுமார் கரோனா தொற்று ஏற்பட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கடந்த வாரம் டெல்லி சென்ற விஜயகுமார் எம்.படி. பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். பின்னர் கடந்த 16ம் தேதி டெல்லியில் கரோனா பரிசோதனை செய்தபோது அவருக்கு கரோனா தொற்று இல்லை.

இந்நிலையில் நாகர்கோவில் வந்திருந்த விஜயகுமார் எம்.பி.க்கு காய்ச்சல், மற்றும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனால் நேற்று இரவு விஜயகுமார் எம்.பி. சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விஜயகுமார் எம்.பி.யின் குடும்பத்தினர், மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT