வாலாஜாபாத் பேருந்து நிலையத்தில் பலரை விரட்டி தாக்கும் மணிகண்டன். 
தமிழகம்

வாலாஜாபாத்தில் பலரை தாக்கியவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய பரிந்துரை

செய்திப்பிரிவு

வாலாஜாபாத் பேருந்து நிலையத்தில் அம்பேத்கர் பிறந்த நாள் விழாவின்போது ஏற்பட்ட தகராறின் தொடர்ச்சியாக இளைஞர் ஒருவர் குடிபோதையில் பலரை விரட்டி, விரட்டி தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைராலனது. இது தொடர்பாக அவர் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் போலீஸார் பரிந்துரை செய்துள்ளனர்.

வாலாஜாபாத் அருகே உள்ள வெண்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன்(28). இவர் வாலாஜாபாத் நேரு நகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலருடன் அம்பேத்கர் பிறந்த நாள் விழாவையொட்டி மாலை அணிவிக்க வந்துள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியது. அப்போது இரும்பு கம்பியை எடுத்துக் கொண்டு மணிகண்டன் பலரைத் தாக்கியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இதுதொடர்பாக மணிகண்டனை நேற்று முன்தினம் போலீஸார் கைது செய்தனர். அரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க காவல் துறையினர் பரிந்துரை செய்துள்ளனர்.

SCROLL FOR NEXT