தமிழகம்

புதுச்சேரி பெரிய மார்க்கெட் காய்கறி கடைகளை இடமாற்றம் செய்ய வியாபாரிகள் எதிர்ப்பு

செய்திப்பிரிவு

புதுச்சேரியில் கரோனாவை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக் கைகளை எடுத்து வருகிறது. மக்கள் தனிமனித இடைவெளியின்றி அதிகமாக கூடும் இடங்களில் அதிகாரிகள், காவல்துறையினர் கண் காணிப்பை அதிகப்படுத்தி உள்ளனர். பெரும்பாலானோர் முகக்கவசம் அணிந்தாலும், தனிமனிதஇடைவெளியை கடைபிடிப்பதில் மெத்தனம் காட்டுகின்றனர். இதனால் கரோனா தடுப்பு நடவ டிக்கைகள் கேள்விக்குறியாகும் சூழல் உருவாகியுள்ளது.

இதனிடையே துணைநிலை ஆளுநர் அறிவுறுத்தலின்படி புதுச்சேரி பெரிய மார்க்கெட் காய்கறிகடைகளை மீண்டும் இடமாற்றம்செய்வதற்கான நடவடிக்கையில் சுகாதாரத்துறை, உள்ளாட்சித் துறை, நகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதற்காக உள்ளாட்சித் துறை இயக்குநர் வல்லவன், நக ராட்சி ஆணையர் சிவக்குமார் ஆகி யோர் பெரிய மார்க்கெட் காய்கறி வியாபாரிகளை நேற்று முன்தினம் அழைத்து பேசினர். அப்போது கரோனா பரவல் மீண்டும் அதிக மாகி இருப்பதை சுட்டிக்காட்டி அரசின் நடவடிக்கைக்கு ஒத்து ழைக்க வேண்டுமென கேட்டுக்கொண்டனர். அதை ஏற்றுக் கொண்ட காய்கறி வியாபாரிகள், மீண்டும் புதிய பேருந்து நிலையம் அல்லது தட்டாஞ்சாவடியில் இடம்ஒதுக்க வேண்டுமென வலியு றுத்தினர்.

ஆனால் அதற்கு அனுமதி மறுத்துவிட்ட அதிகாரிகள், கரோனா 2-வது அலையில் பேருந்து சேவையை முழுமையாக நிறுத்தும் திட்டம் அரசிடம் இல்லை. எனவே மாற்று இடமாக உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு திடல், தேங்காய்திட்டு புதிய துறைமுகப் பகுதிக்கு சென்று வியாபா ரம் செய்து கொள்ள அனுமதிக்கப் படுவதாக தெரிவித்தனர்.

இதை ஏற்க மறுத்த வியாபாரிகள், இதுபற்றி சங்க உறுப்பினர் களை ஆலோசித்து முடிவை தெரிவிப்பதாக கூறினர். அதன்படி நேற்று காய்கறி மார்கெட் வியா பாரிகள் நலச்சங்க நிர்வாகிகள் சிவகுருநாதன் தலைமையில் ஆலோசித்தனர். இதில் மீண்டும்பழைய இடத்தை ஒதுக்கி கொடுத் தால் மட்டுமே அங்கு சென்று வியாபாரத்தை தொடர்வது, இல்லா விடில் அரசின் விதிகளை கடை பிடித்து தனிமனித இடைவெளியை பின்பற்றி இங்கேயே வியா பாரத்தை தொடர்வது அல்லது ஒட்டுமொத்தமாக காய்கறி வியாபாரிகள் அனைவரும் பெரிய மார்க்கெட் கடைகளை மூடிவிட்டு வீட் டுக்கு செல்வது என்பது உள்ளிட்ட முடிவுகளை எடுத்துள்ளதாக கூறப் படுகிறது.

நலச்சங்கத்தில் எடுக்கப்பட்ட முடிவை அதிகாரிகளிடம் தெரி வித்து, அதற்கு அவர்கள் தெரிவிக்கும் பதிலை பொறுத்து அடுத் தகட்ட நடவடிக்கை இருக்கும் என வியாபாரிகள் குறிப்பிட்டனர்.

SCROLL FOR NEXT