சேத்துப்பட்டு கண்ணனூர் ஏரியில் மீன்கள் இறந்து மிதப்பதால் துர்நாற்றம் வீசுகிறது.
தி.மலை மாவட்டம் சேத்துப் பட்டு அடுத்த கண்ணனூரில் 80 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. இதில், பல லட்சம் மீன்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கடந்த சில நாட்களாக, ஏரியில் உள்ள மீன்கள் இறந்து மிதக்கின்றன. மீன்களின் இறப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உயிரிழந்த மீன்கள், கரையோரம் ஒதுங்குவதால் துர்நாற்றம் வீசுகிறது.
இது குறித்து கண்ணனூர் பகுதி மக்கள் கூறும்போது, “கண் ணனூர் ஏரியில் உள்ள மீன்கள் இறந்து மிதக்கிறது. உயிரிழந்த மீன்கள் கரை ஒதுங்கி வருவதால், குடியிருப்புப் பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.
மேலும் ஏரியில் உள்ள தண்ணீரும் மாசு அடைந்துள்ளது. இதனால், சுகாதாரச் சீர்கெடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. உயிரிழந்த மீன்களை அகற்றி, மேலும் மீன்கள் அனைத்தும் உயிரிழக்காமல் பாதுகாத்து ஏரியை தூய்மையாக வைத்திருக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.