கோவை வடக்கு வடவள்ளி சண்முகசுந்தரம், மேட்டுப்பாளையம் டி.ஆர். சண்முகசுந்தரம், கவுண்டம்பாளையம் பையா கவுண்டர் - உதயசூரியன் வேட்பாளர்களாக களத்தில் நிற்கும் இந்த மூவருமே நிச்சயம் வெற்றி பெறுவார்கள் என உடன்பிறப்புகள் அடித்துச் சொல்கிறார்கள். மூவருமே ரியல் எஸ்டேட் தொழிலில் கொடி நாட்டியவர்கள் என்பதால் பணத்தை வாரி இறைத்திருக்கிறார்கள். வடவள்ளி சண்முக சுந்தரம் ரியல் எஸ்டேட் கம்பெனியில் தனக்கான பங்கைப் பிரித்து 10 கோடி ரூபாய்க்கு விற்று செலவழித்திருக்கிறாராம். இதையெல்லாம் வைத்து இந்த மூவரின் வெற்றி உறுதி என்கிறது திமுக வட்டாரம். ஆனால், மக்கள் என்ன முடிவெடுத்தார்களோ தெரியலையே சாமி!