தமிழகம்

மருத்துவ பல்கலை. புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய குழு நியமனம்

செய்திப்பிரிவு

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத் துவ பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரான டாக்டர் டி.சாந்தாராமின் பதவிக்காலம் இன்றுடன் (டிசம்பர் 12) முடிவடைகிறது. இந்த நிலையில், புதிய துணைவேந்தரை தேர்வு செய்யும் வகையில், சென்னை சைல்டு டிரஸ்ட் மருத்துவ ஆராய்ச்சி அறக்கட்டளை யின் தலைவர் டாக்டர் கே.மாதங்கி ராமகிருஷ்ணனை அமைப்பாள ராகக் கொண்டு தேர்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த நீரிழிவு சிகிச்சை நிபுணர் டாக்டர் எம்.எஸ்.ராமச்சந்திரன், அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் வி.சாந்தா ஆகி யோர் உறுப்பினர்களாக நியமிக்கப் பட்டுள்ளனர். இத்தேர்வுக்குழு, துணைவேந்தர் பதவிக்கு 3 பேர் களை பல்கலைக்கழக வேந்தரான ஆளுநருக்கு பரிந்துரை செய்யும். அவர்களில் ஒருவர் துணைவேந்த ராக ஆளுநரால் நியமிக்கப்படுவார்.

டிசம்பர் 17-க்குள்..

துணைவேந்தர் பதவிக்கு விண் ணப்பிக்க விரும்புவோர் தங் களைப் பற்றிய முழு விவர குறிப்புகளுடன் டிசம்பர் 17ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு தேர்வுக்குழுவின் அமைப்பாளரான டாக்டர் மாதங்கி ராமகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT