மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நேற்றிரவு மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடை பெற்றது. அதனைத் தொடர்ந்து நாளை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் பக்தர்கள் பங் கேற்பின்றி நடைபெற உள்ளது.
உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரைத் திருவிழாவை, கரோனா 2-ம் அலை பரவல் காரணமாக கடந்தாண்டைப்போல் இந்தாண் டும் பக்தர்கள் அனுமதியின்றி கோயில் வளாகத்திலேயே நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் படி சித்திரைத் திருவிழா ஏப்.15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங் கியது. அதனைத்தொடர்ந்து காலை, மாலையில் ஆடி வீதியில் பல்வேறு வாகனங்களில் பிரியா விடையுடன் சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன் புறப்பாடு நடைபெற்றது. புறப்பாடு முடிந்தவுடன் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
எட்டாம் திருநாளான நேற்று பட்டாபிஷேகத்தன்று காலையில் மீனாட்சி, சுந்தரேசுவரர் தங்கப் பல்லக்கில் எழுந்தருளி ஆடி வீதி களில் வலம் வந்தனர்.
இரவு 8.05 மணிக்குமேல் 8.30 மணிக்குள் அம்மன் சன்னதியில் உள்ள ஆறுகால் பீடத்தில் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடை பெற்றது. அப்போது மீனாட்சி அம் மனுக்கு ராயர் கிரீடம் சூட்டி, நவரத்தினத்தாலான செங்கோல் வழங்கப்பட்டு, பட்டத்து ராணியாக பட்டாபிஷேகம் நடைபெற்றது. அம்மனிடமிருந்து செங்கோல் கோயில் தக்கார் கருமுத்து தி. கண் ணனிடம் ஒப்படைக்கப்பட்டது. செங்கோலை பெற்ற தக்கார் கரு முத்து கண்ணன், சுவாமி சன்னதி 2ம் பிரகாரத்தில் வலம் வந்து மீண்டும் மீனாட்சி அம்மனிடம் ஒப்படைத்தார்.
பட்டாபிஷேகம் முடிந்ததால் மதுரை மாநகரில் மீனாட்சி அம்மனின் ஆட்சி தொடங்கியதாகவும், சித் திரை முதல் ஆவணி மாதங்கள் வரை மீனாட்சியின் ஆட்சி நடப் பதாகவும் ஐதீகம்.
ஒன்பதாம் திருநாளான இன்று திக்கு விஜயம் நடைபெறுகிறது. நாளை திருக்கல்யாணம் காலை 8.30 மணிக்கு மேல் 9 மணிக் குள் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெறுகிறது. திருக்கல்யாணத்தில் பக்தர்களுக்கு அனுமதியில்லாததால் வீட்டிலி ருந்தபடியே காணும் வகையில் கோயில் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை இணையதள ங்களில் ஒளிபரப்பப்படுகிறது. பின்னர் பிற்பகல் 3.30 முதல் 5.30 மணி வரையும், 7.30 முதல் 9 மணி வரையும் பக்தர்கள் அனுமதிக் கப்படுவர்.
ஏப்.25-ம் தேதி சட்டத்தேர் காலை 5 மணி முதல் 7 மணிக்குள் நடைபெறும். ஏப்ரல் 26-ம் தேதி 12-ம் திருநாள் சுவாமி புறப்பாடுடன் திருவிழா நிறைவுபெறும்.