தமிழகம்

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து கமீலா நாசர் விலகியது ஏன்?

செய்திப்பிரிவு

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து கமீலா நாசர் விலகியது ஏன் என்பது தொடர்பாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநிலச் செயலாளர் சென்னை மண்டலம்(கட்டமைப்பு) கமீலா நாசர் தனது கட்சிப் பதவியை திடீரென்று ராஜினாமா செய்துள்ளார்.

இது தொடர்பாக, மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:

கட்சியில் ஏதாவது தவறுகள்நடந்தால், யாராக இருந்தாலும் கேள்வி கேட்பது கமீலா நாசரின் வழக்கம். சட்டப்பேரவை தேர்தலில் திமுகவுக்காக பணியாற்றிய ஐபேக் நிறுவனத்தைப் போன்று மக்கள் நீதி மய்யத்துக்கு ‘சன் கேர் சொலியூஷன்’ என்ற நிறுவனம்பணியாற்றியது. அந் நிறுவனம் மேற்கொள்ளும் பணிகளில் ஏதாவது தவறுகள் இருந்தாலும் கமீலா நாசர் சுட்டிக்காட்டி வந்தார்.

இதுஒருபுறமிருக்க, விருகம்பாக்கம் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட திட்டமிட்டு நீண்டகாலமாக கமீலா நாசர் பணியாற்றி வந்தார். விருப்ப மனுவும் தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், விருகம்பாக்கம் தொகுதியில் கமீலா நாசரைபோட்டியிட வைப்பதைவிட சிநேகனை போட்டியிட வைப்பதுசிறந்தது என்று ‘சன் கேர் சொலியூஷன்’ நிறுவனம் வேட்பாளர் பட்டியல் தயாரிக்கும் குழுவிடம்எடுத்துரைத்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சியில் கமீலா நாசர் கலந்து கொண்டார்.

இருப்பினும், எதிர்பார்த்தபடி விருகம்பாக்கம் தொகுதி தனக்கு ஒதுக்கீடு செய்யப்படாததால் கமீலா நாசர் அதிருப்தி அடைந்தார். அதைத் தொடர்ந்து, கட்சிசார்ந்த பணிகளில் ஈடுபடாமல் ஒதுங்கி இருந்தார். மேலும், கடந்த மாதமே தனது ராஜினாமாகடிதத்தை அளித்துவிட்டார். தேர்தல் காரணமாக அவரது ராஜினாமா ஏற்கப்படாமல் இருந்தது.இந்தச் சூழலில்தான் தேர்தல்முடிந்த பிறகு, கமீலா நாசரின்ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்படுவதாக கட்சியின் சார்பில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT