மதுரையில் செய்தியாளர்களிடம் பேசினார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன். படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி 
தமிழகம்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு எதிராக அவதூறு; ராமதாஸ் மீது வழக்கு தொடருவோம்: மதுரையில் திருமாவளவன் அறிவிப்பு

செய்திப்பிரிவு

எங்களுக்கு எதிராக பாமக அவதூறு பரப்பினால் ராமதாஸ் மீது வழக்கு தொடருவோம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் அரக்கோணத்தில் நடந்த இரட்டைக் கொலை தொடர் பான கருத்தரங்கம் மதுரை கே.கே. நகரில் தனியார் ஓட்டலில் நடை பெற்றது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் எம்பி பங்கேற்றார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சட்டப்பேரவைத் தேர்தலைத் தொடர்ந்து நடந்த அரக்கோணம் இரட்டைக் கொலை சாதி வெறியர்களால் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது. இவ்வழக் கில் காவல்துறை ஒரு சார்பாக செயல்பட்டுள்ளது. எனவே இவ்வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்.

பாமக சாதியக் கொடுமையை கூர் நோக்குவதில் குறியாக உள்ளது. மக்கள் பிரச்சினைகளை ராமதாஸ் திசை திருப்பி பேசி வருகிறார். சரஸ்வதி என்ற பெண் கொலையை ராமதாஸ் திசை திருப்புகிறார். விசிக மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வரும் ராமதாஸ் மீது அவதூறு வழக்கு தொடரப்படும். சரஸ்வதி படுகொ லைக்கும், விசிகவுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை.

எங்களுக்கு எதிராக தொடர்ந்து அவதூறு பரப்பினால் சகித்துக் கொள்ள மாட்டோம். இதை சட்டரீதியாக எதிர் கொள்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT