தூத்துக்குடி அருகே பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகள் மற்றும் கைது செய்யப்பட்ட நபருடன் வனத்துறையினர். 
தமிழகம்

தூத்துக்குடி அருகே குடோனில் 100 கிலோ கடல் அட்டை பறிமுதல்: சங்கரன்கோவில் இளைஞர் கைது

செய்திப்பிரிவு

தூத்துக்குடி அருகே குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100 கிலோ கடல் அட்டைகளை வனத்துறையினர் நேற்று பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி அருகே மாப்பிளையூரணி பகுதியில் உள்ள ஒரு குடோனில் கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக, தூத்துக்குடி போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக வனத்துறை அதிகாரிகளுக்கு, டிஎஸ்பி கணேஷ் தகவல் தெரிவித்தார்.

வனச்சரக அலுவலர் ரகுவரன், வனவர் அருண்குமார், வனக்காப்பாளர் ரெங்கநாத் உள்ளிட்டோர் அந்த பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அங்குள்ள குடோனில் கேன்களில் 100 கிலோ கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன.

அங்கிருந்த சங்கரன்கோவிலைச் சேர்ந்த பா.மணிக்கீரிவன் (29) என்பவரை வனத்துறையினர் கைது செய்தனர். மேலும், தப்பியோடிய தூத்துக்குடியை சேர்ந்த மன்சூர் அலி என்பவரை தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT