தமிழகம்

எளிய முறையில் கற்க உதவும் காமராஜர் மின்ஆளுகை செயலி: தமாகா சார்பில் தஞ்சையில் தொடக்கம்

செய்திப்பிரிவு

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் காமராஜர் மின் ஆளுகைச் செயலி (இ-காமராஜர் ஆப்) நேற்று தொடங்கப்பட்டது.

இந்தச் செயலியைப் பள்ளி மாணவ - மாணவிகள் தொடங்கி வைத்தனர். இதுகுறித்து தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியது:

காமராஜர் மின்ஆளுகைச் செயலி என்பது கல்வி கற்க உதவும் சாதனம். இதன் மூலம் 3 வயது முதல் 10 வயதுக்கு உட்பட்ட பள்ளிக் குழந்தைகள் தாங்களே கல்வி கற்கலாம். இதற்காக செல்போன், மடிக்கணினியை பயன்படுத்தலாம்.

இதில், பள்ளிப் பாடங்கள் எளிமையான முறையில் கற்றுத் தரப்படும். கணினியில் கற்பிப்பதை குழந்தைகள் திரும்பத் திரும்ப மனதில் பதியும் வரை கேட்கலாம். இது அதிக மதிப்பெண் பெற உதவியாக இருக்கும்.

இந்த செயலியில் சமச்சீர் கல்வி முறையிலான தமிழ், ஆங்கிலம், கணிதப் பாடங்கள் இடம்பெறும். மேலும், குழந்தைகளின் தொடக்க கால வளர்ச்சிக்கு அடிப்படைத் தேவைகளான அறிவுத் திறன் பயிற்சி, ஒழுக்கநெறிகள், குழந்தைப் பாடல்கள் ஆகியவை யும் இடம்பெறுகின்றன.

கல்வியை ஒவ்வொரு வீட்டுக் கும் நேரடியாக கொண்டு செல்ல வேண்டுமென்பதே இதன் நோக் கம். இதற்குத் தேவையான உபகரணங்கள், சாதனங்கள், வழி முறைகள் ஆகியவற்றை கல்வி யாளர்கள், நிபுணர் குழுவினர் உருவாக்கியுள்ளனர். இதை உலகெங்கும் வாழும் கோடிக்கணக் கான தமிழ் மக்கள் இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

எல்லோருக்கும் கல்வி என்ற காமராஜரின் கனவை நனவாக்கு வதற்காக, அவரது பெயரில் இந்தச் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் பயன் அனைவருக்கும் கிடைக்க வேண்டுமென்பதற்காக பலவகையான தொடர்பு வழிமுறை களை உருவாக்கியுள்ளோம் என்றார். விழாவில், தமாகா பொதுச் செயலாளர் எஸ்.வி. திருஞானசம்பந்தம், மாவட்டத் தலைவர்கள் என்.ஆர்.ரங்கராஜன், எம்.ராம்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT