தமிழகத்தில் 3,500 ஆம்னி பேருந் துகள் இயங்குகின்றன. மதுரை மாட்டுத்தாவணி ஆம்னி பஸ் நிலையத்திலிருந்து தினமும் 150-க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள், சென்னை, பெங்களூரு மற்றும் பிற மாவட்ட முக்கிய நகரங்களுக்கு இயக்கப்படுகின்றன.
கடந்த ஆண்டு கரோனாவால் ஆம்னி பஸ்கள் பாதிக்கப்பட தொடங்கியது. ஆம்னி பஸ்களில் பெரும்பாலானவை குளிர்சாதன வசதியுடன் கூடியவை. கரோனா தொற்று ‘ஏசி’ மூலம் அதிகளவு பரவ வாய்ப்புள்ளதாக கூறப்பட்டதால் ஆம்னி பஸ்களில் செல்வதை மக்கள் தவிர்த்தனர்.
கரோனா ஊரடங்குக்குப் பிறகு மற்ற தொழில்கள் ஓரளவு மீண்டாலும் தற்போது வரை ஆம்னி பஸ்கள் முன்புபோல் இயங்கத் தொடங்கவில்லை.
இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக மீண்டும் கரோனா பரவத் தொடங்கியதால் பயணிகள் ஆம்னி பஸ்களில் செல்ல ஆர்வம் காட்டவில்லை.
அதனால் ஆம்னி பஸ்களில் கூட்டம் இல்லாமல் ஆம்னி பஸ்நிலையம் வெறிச்சோடியே காணப்பட்டது. பஸ்களில் கிடைக்கும் வருவாய் குறைந்ததால் அதில் பணிபுரிந்த ஊழியர்கள் பாதிக்கப்பட்டனர். தற்போது கரோனாவை கட்டுப்படுத்த இரவு நேரத்தில் பஸ்களை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதனால் மதுரை ஆம்னி பஸ் நிலையத்தில் மதியம் வரை மட்டுமே வெளியூர்களுக்கு செல்லும் பஸ் கள் புறப்படுகின்றன. அதுவும் 50 சதவீத இருக்கைகளுடன் மட் டுமே இயக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள தால் நஷ்டத்தில் இயக்க வேண்டி உள்ளது. நேற்று ரூ.300 கட்டணத்துக்கு சில ஆம்னி பஸ்கள், சென்னைக்கு இயக்க முன்வந்தும், பயணிகள் அதில் செல்ல ஆர்வம் காட்டவில்லை.
ஆம்னி பஸ் ஊழியர் செல்வம் கூறியதாவது: மதியத்துக்கு மேல் மதுரையில் இருந்து ஆம்னி பஸ்கள் செல்லவில்லை. தூங்கிக் கொண்டே பயணம் செய்யலாம் என்பதால் இரவு நேரத்தில்தான் பயணிகள் ஆம்னி பஸ்களில் பயணிக்க ஆர்வம் காட்டுவர். ஆனால் இரவு நேரத்தில் ஊரடங்கு காரணமாக ஒட்டுமொத்த பஸ்களும் இயக்க முடியாமல் நிறுத்தப்பட்டுள்ளன. நேற்று பெங்களூரு, கோவைக்கு தலா ஒரு பஸ் மட்டுமே இயக்கப்பட்டது. சென்னைக்கும் குறைந்தளவு பஸ்களே இயக்கப்பட்டன. மொத் தம் நேற்று 15 ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டன.
இதேநிலை தொடர்ந்தால் ஆம்னி பஸ்கள் இயக்கத்தில் பெரும் நஷ்டம் ஏற்படும்,’’ என்றார்.
வெளியூர்களுக்குச் செல்ல வேண்டிய சரக்குப் பொருட்கள் ஆம்னி பஸ்கள் மூலம் அனுப்பி வைக்கப்படும். அதன் மூலமும் வருவாய் கிடைக்கும்.
தற்போது இரவு நேரத்தில் பஸ் கள் இயக்க முடியாததால் சரக்குப் பொருட்கள் மூலம் கிடைக்கும் வருவாயும் பாதிக்கப்பட்டுள்ளது என்றனர்.