வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் விநியோக குறைபாட்டால் நோயாளிகள் 7 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. தினசரி பாதிப்பு 11 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. வேலூர் மாவட்டத்திலும் தினசரி 150-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று பாதிப்பு ஏற் பட்டு வருகிறது.
வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் 175 கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு 145 படுக்கை கள் ஐசியூ வசதி கொண்டதாகவும், 360 படுக்கைகள் ஆக்சிஜன் வசதி கொண்ட தாகவும் உள்ளன. 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒருங்கிணைந்த ஆக்சிஜன் விநியோக மையமும் செயல் படுகிறது. அத்துடன், 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் சிலிண் டர் கூடுதலாக பொருத்தப்பட்டு விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளது.
நோயாளிகள் உயிரிழப்பு
இந்நிலையில், மருத்துவமனை வளா கத்தில் உள்ள ஒருங்கிணைந்த ஆக்சிஜன் விநியோக மையத்தில் நேற்று மாலை திடீரென கோளாறு ஏற்பட்டுள்ளது. அத னால், வார்டுகளுக்கு ஆக்சிஜன் விநி யோகம் பாதிக்கப்பட்டது. கரோனா வார் டில் ஆக்சிஜன் மூலம் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் சிரமப்பட்டனர்.மருத் துவமனை ஊழியர்கள் மாற்று ஏற்பாடுகளை செய்வதற்குள் சிகிச்சையில் இருந்த பிரேம், செல்வராஜ், ராஜேஸ்வரி, லீலா வதி ஆகியோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அதேபோல, பொது வார்டில் சிகிச்சை பெற்று வந்த ராஜேந்திரன் என்பவர் உள்ளிட்ட மொத்தம் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
அடுத்தடுத்து உயிரிழப்புகள் ஏற்பட்டதால் அதிர்ச்சியடைந்த மருத்துவமனை நிர்வாகம், கரோனா வார்டில் இருந்தவர் களை வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றும் பணியில் ஈடுபட்டது. நிலை மையை சமாளிக்க வெளியில் இருந்து எடுத்து வரப்பட்ட 45 ஆக்சிஜன் சிலிண்டர் களை வார்டுகள் வாரியாக அனுப்பி வைத் தனர். ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டதும் அதை சரி செய்ய முடியாமல் ஊழியர்கள் திணறினர். மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியத்தால்தான் இந்த சம்பவம் நடந்த தாக உயிரிழந்தவர்களின் உறவினர்கள் குற்றம்சாட்டினர்.
இதுபற்றி தகவலறிந்த வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், மாவட்ட சுகா தார பணிகள் துணை இயக்குநர் மணி வண்ணன் ஆகியோர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். மருத்துவமனை டீன் செல்வி யிடம் நோயாளிகள் உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் கூறியதாவது;
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டி ருந்த நபர்களில் 88, 55, 68, 66 வயதுள்ள நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். கரோனா தொற்று இல்லாமல் மற்ற வார்டுகளில் சிகிச்சை பெற்று வந்த 3 பேர் உயிரிழந் துள்ளனர். அவர்களுக்கு உடல் ரீதியான பல்வேறு பிரச்சினைகள் இருந்ததால் உயி ரிழந்துள்ளனர். இங்கு, 2 மருத்துவர்கள் உட்பட மொத்தம் 121 பேர் ஆக்சிஜன் மூலம் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆக் சிஜன் தட்டுப்பாடு இருந்தால் அவர்களும் பாதிக்கப்பட்டிருப்பார்கள்.
மருத்துவமனையில் ஆக்சிஜன் விநி யோக பணிக்கான பராமரிப்புப் பணிகள் மட்டும் இன்று (நேற்று) நடந்துள்ளது. ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு யாரும் உயிரிழக்கவில்லை. இருந்தாலும் 7 பேர் இறப்புக்கான காரணம் குறித்து விரிவான விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
வேலூர் மாவட்டத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை எதுவும் இல்லை. ஏற் கெனவே 10 ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் விநியோக மையம் இருக்கும்போது, தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க மாற்று ஏற்பாடாக சிலிண்டர்களில் தயார் நிலையில் ஆக்சிஜன் வைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து எந்த நோயாளியையும் வேறு மாவட்ட மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கவில்லை. கரோனா தொற்று இல்லாத நோயாளிகளை கோவிட் நல மருத்துவமனைகளுக்கு மாற்று வது வழக்கம். அந்தப் பணியின் ஒரு பகுதியாக நோயாளிகள் பலர் மாற்றப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.