வெள்ள நிவாரணப் பணியில் ஈடுபட்ட சென்னை மூத்த குடி மக்கள் ஆதரவு மன்றத்தினருக்கு பாராட்டு விழா நடத்தப் பட்டது.
சென்னை ஆழ்வார்பேட்டை யில் உள்ள ரஷ்யன் கலாச்சார மையத்தில் நடந்த விழாவுக்கு மன்றத் தலைவர் வி.ஜி.சந்தோஷம் தலைமை வகித் தார். அவர் பேசும்போது, ‘‘இந்த வெள்ளம் நமக்கு மனிதம் என்ற ஒரு பாடத்தை மிகத் தெளிவாக கற்றுத் தந்து விட்டு சென்றிருக்கிறது. மூத்த குடிமக்கள் ஆதரவு மன்ற மும் வெள்ள நிவாரணப் பணி களில் பங்கெடுத்துக் கொண்டது பாராட்டுக் குரியது’’ என்றார்.
சிறப்பு விருந்தினராக பங் கேற்ற ஓய்வுபெற்ற நீதிபதி டி.என்.வள்ளிநாயகம், வெள்ளத் தின்போது தன்னலமின்றி உழைத்தவர்களை பாராட்டி கவுரவித்தார். சத்யா கல்வி அறக் கட்டளை நிர்வாகி நீலா கோவிந்தராஜ், முதியவர்களுக் கான காது கேளாமை குறித்து விளக்கினார்.
விசில் மூலம் பாட்டுப்பாடி மகிழ்வித்த ஸ்வேதா, கிறிஸ்டி ஆண்ட்ரியாவுக்கு பரிசுகள் வழங் கப்பட்டன. முன்னதாக மன்றத் தின் செயலாளர் ஆர்.சுப்பராஜ் வரவேற்றார். நிறைவாக ஜெயலட்சுமி நன்றி கூறினார்.